எந்த தடுப்பூசியும் 100 சதவிகிதம் பாதுகாப்பானவை அல்ல: டாக்டர் ரவீந்திரநாத்

எந்த தடுப்பூசியும் 100 சதவிகிதம் பாதுகாப்பானவை அல்ல: டாக்டர் ரவீந்திரநாத்

எந்த தடுப்பூசியும் 100% பாதுகாப்பானது அல்ல என அந்த டாக்டர் ரவீந்திரநாத் என்பவர் பேட்டி அளித்துள்ளார். சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் ரவீந்திரநாத் அவர்கள் இது குறித்து மேலும் கூறியதாவது:

அரசு மற்றும் அரசு சாராத மருத்துவ நிபுணர்கள் கொண்ட ஒரு குழு கொரோனா தடுப்பூசி குறித்து ஆராய வேண்டும். அதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு மருந்துக்கான காரணத்தையும் உண்மைத்தன்மையை மக்கள் மத்தியில் தெளிவாக அரசு அறிவிக்க வேண்டும். அப்பொழுதுதான் தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்.

விஞ்ஞானம் என்பது நம்பிக்கை அடிப்படையில் கிடையாது. அது ஆதாரப்பூர்வமான ஒன்று. கொரோன தடுப்பூசி போட்டு கொண்டவர் இறந்தால் அவரது இறப்பு எதனால் நடந்தது, எதனால் நிகழவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அந்த வகையில் இன்றைக்கு பல்வேறு இறப்புகளை மத்திய மாநில அரசுகள் தெளிவாக மக்கள் மத்தியில் விளக்க வேண்டும்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மிகச்சிலர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் எந்த தடுப்பூசியும் 100% பாதுகாப்பானது அல்ல. போலியோ தடுப்பூசியால் இன்று போலியோ இந்தியாவில் ஒழிக்கப்பட்டாலும், 27 லட்சம் குழந்தைகளுக்கு ஒரு குழந்தைக்கு போலியோவால் பாதிக்கப்படத் தான் செய்கின்றனர் அதற்காக போலியோ தடுப்பூசி போடாமல் இருக்க முடியாது. எனவே எந்த தடுப்பூசியும் 100% பாதுகாப்பானது என சொல்ல முடியாது.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் உயிரிழந்தால் அவர்கள் உயிரிழந்ததன் காரணத்தை மக்கள் மத்தியில் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com