கொரோனா பரவல் அதிகரித்தாலும் போராட்டத்தை நிறுத்த முடியாது: டெல்லி விவசாயிகள் அறிவிப்பு!

கொரோனா பரவல் அதிகரித்தாலும் போராட்டத்தை நிறுத்த முடியாது: டெல்லி விவசாயிகள் அறிவிப்பு!

புதிய வேளாண்மை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வெயில் மழை என்று பாராமல் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டம் 143 ஆவது நாளாக நீடித்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் குறிப்பாக டெல்லியை இந்த வைரஸ் அதிகமாக தாக்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் இந்த கோரிக்கையை விவசாயிகள் நிராகரித்துள்ளனர். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து ஆளும் போராட்டத்தை நிறுத்த போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மனித நேயத்தின் அடிப்படையில் விவசாயிகளின் போராட்டம் நடத்தும் இடங்களில் அரசாங்கம் தடுப்பூசி மையங்களை அமைக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கும் தடுப்பூசி போடவேண்டும் என்றும் அது மட்டுமின்றி கொரோனா வைரசால் யாராவது பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com