Connect with us

இந்தியா

நீதி கிடைத்தது நிர்பயாவுக்கு

Published

on

நீதி கிடைத்தது நிர்பயாவுக்கு
தலைநகர் டெல்லியில் கடந்த 2012ம்  ஆண்டு டிசம்பர் 16ம் தேதி பேருந்தில் தனது நண்பருடன் பயணித்த மருத்துவ மாணவி 6 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
சிங்கப்பூர் அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் 2013 ஜனவரி மாதம் இறந்தார்.
குற்றவாளிகளில் ஒருவன் சிறார் என்பதால் 3 ஆண்டுகள் தண்டனை பெற்று பின் விடுதலை செய்யப்பட்டான்.
எஞ்சிய 5 பேருக்கும் கிழமை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.அதை உயர்நீதிமன்றமும்,உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.அதில் பேருந்து ஓட்டுநர் ராம்சிங் என்பவன் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
மீதம் இருந்த அக்ஷய்குமார்,பவன்,முகேஷ்,வினய் ஆகியோர்க்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்பாக  தண்டனையில்  இருந்து  தப்ப நான்குபேரும் தனித்தனியாகக் குடியரசு தலைவரிடம் கருணை மனு அளித்தனர். குடியரசுத் தலைவர் அனைவரது  மனுக்களையும் நிராகரித்தார்.
அதைத்தொடர்ந்து இன்று காலை 5.30 மணிக்கு நான்கு  பேரும்  தூக்கிலிடப்பட்டனர்.நான்கு பேரும்  தங்களது கடைசி ஆசையைத் தெரிவிக்கவில்லை என்று திகார் சிறை நிர்வாகம் தெரிவித்தது .
தனது மகளுக்கு நீதி கிடைத்து விட்டதாக நிர்பாயாவின் தாய் கண்ணீர் மல்க கூறினார்.மக்களாலும்,நீதித்துறையாலும் ,ஊடகத்தாலும்  தான் தன் மகளுக்கு நீதி கிடைத்து இருக்கிறது என்று நிர்பாயாவின்  தந்தை நன்றி தெரிவித்துள்ளார்.
வணிகம்11 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?