ஐபிஎல் தொடரில் இருந்து நடராஜன் விலகலா? அதிர்ச்சி தகவல்

ஐபிஎல் தொடரில் இருந்து நடராஜன் விலகலா? அதிர்ச்சி தகவல்

ஐபிஎல் தொடரில் இருந்து நடராஜன் விலக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது அவரது ரசிகர்களுக்கு பேரர்ச்சியாக உள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் நடராஜன் விளையாடி வருகிறார். அவர் முதல் இரண்டு போட்டிகளில் மட்டும் விளையாடிய நிலையில் திடீரென அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதால் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவரது காயம் பெரிதாக இருப்பதாகவும் ஒரு வாரம் அவர் எழுந்து நிற்கக் கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனை அடுத்து அவர் உடல் தகுதி பெற்று அதன் பிறகு தனிமைப்படுத்துதல் காலம் முடிவடைதற்குள் ஐபிஎல் கிட்டதட்ட முடிவடைந்து விடும் என்றும் அதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சேர்ந்த ஐதராபாத் அணியின் அதிகாரி ஒருவர் கூறியபோது நடராஜன் காயம் குறித்து அறிக்கை இன்னும் எங்களுக்கு வரவில்லை என்றும் அந்த அறிக்கை வந்தவுடன் அவரை அணியில் இருந்து விடுவிப்பது குறித்து பிசிசிஐயிடம் தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் இதுகுறித்து கூறிய போது நடராஜனை நாங்கல் மிகவும் எதிர்பார்க்கின்றோம் என்றும், ஆனால் துரதிஸ்டவசமாக அவரது காயம் அதிகம் இருப்பதால் அவர் அணியில் இணைவது சந்தேகம்தான் என்று கூறியுள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com