முத்தையா முரளிதரன் சென்னை மருத்துவமனையில் அனுமதி: ஆஞ்சியோ சிகிச்சை என தகவல்

முத்தையா முரளிதரன் சென்னை மருத்துவமனையில் அனுமதி: ஆஞ்சியோ சிகிச்சை என தகவல்

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

முத்தையா முரளிதரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது உறவினர்களும் மருத்துவமனையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் முத்தையா முரளிதரன் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்பது குறித்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் விரைவில் அறிக்கை ஒன்றை வெளியிடும் என்றும் அந்த அறிக்கையில் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த தகவல்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

முத்தையா முரளிதரன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தகவல் தெரிந்ததும் அவரது ரசிகர்கள் அவர் விரைவில் குணமாக வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர். இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களும் முத்தையா முரளிதரன் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com