Connect with us

செய்திகள்

தீண்டாமை சுவர் விவகாரம்!. கல்லால் தாக்கி பெண்ணின் கால் உடைப்பு….அதிர்ச்சி வீடியோ…

Published

on

video

தீண்டாமை என்பது பாவச்செயல்.. தீண்டாமை என்பது பெருங்குற்றம் என மாணவர்களின் புத்தகங்களில் அச்சிடப்பட்டிருந்தாலும் நடைமுறையில் தமிழகத்தின் பல ஊர்களிலும் தீண்டாமை இன்னும் கடைபிடிக்கப்பட்டுதான் வருகிறது.

இறந்து போன உடலை கூட இந்த வழியாக எடுத்து செல்லக்கூடாது என மேல் சாதி மக்கள் கூறுவதால், சில கிலோ மீட்டர் சுற்றி பிணற்றை எடுத்து சென்று அடக்கம் செய்யும் இழிவு இப்போதும் தமிழகத்தில் சில பகுதிகளில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சில இடங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் இந்த பக்கம் வரக்கூடாது என மேல் சாதியினர் சுவரே எழுப்பியுள்ளனர்.

இது போன்ற ஒரு சுவர் சேலம் மாவட்டம் நங்கவள்ளி அம்பேத்கார் நகரிலும் தீண்டாமை சுவர் உள்ளது. இந்நிலையில், இந்த சுவரை அகற்ற வேண்டும் என புகார் கொடுத்த தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒரு பெண்மணியை அப்பகுதி மக்கள் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண் மீது ஒருவர் கல்லை கொண்டு எறிய அது அவரின் காலில் பட்டு அவர் வலியால் துடிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

இதையடுத்து, தலித்துகள், பெண்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்களை தீண்டாமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

வணிகம்15 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?