காலில் விழக்கூட தயார், ஆக்சிஜன் கொடுங்கள்: மத்திய அரசிடம் கெஞ்சும் மாநில அமைச்சர்!

காலில் விழக்கூட தயார், ஆக்சிஜன் கொடுங்கள்: மத்திய அரசிடம் கெஞ்சும் மாநில அமைச்சர்!

கொரோனா நோயாளிகள் ஒரு பக்கம் கொத்து கொத்தாக மடிந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் அதிகமாகிக் கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொடுப்பதற்கு ஆக்சிஜன் இல்லாத நிலை பல மருத்துவமனைகளில் உள்ளது. மாநில அரசுகள் மத்திய அரசிடம் ஆக்சிஜன் சிலிண்டருக்காக கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மத்திய அரசின் காலில் விழுவதற்கு தயாராக இருக்கிறேன், தயவுசெய்து ஆக்சிஜனை கொடுங்கள் என்று கூறியுள்ளது பெரும் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. குறிப்பாக தலைநகர் மும்பையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் ஆக்சிஜன் தேவைக்காக மத்திய அரசுக்கு மகாராஷ்டிர சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோபே அவர்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா நோயாளிகளின் உயிரைக் காக்க எங்கள் அரசு தீவிரமாக போராடி வருகிறது. இந்த நேரத்தில் தாழ்மையான முறையில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஆக்சிஜன் பெறுவதற்காக மத்திய அரசின் காலில் விழுவதற்கு கூட தயார் என்று கூறியுள்ளார்.

மாநிலங்களுக்கு ஆக்சிஜன் வினியோகம் உரிமை மத்திய அரசின் கையில் உள்ளதால் மத்திய அரசை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் மாநிலத்தில் போதுமான ஆட்சியை வழங்க மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com