அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் மனைவி உடல்நலக்கோளாறால் காலமானார்!

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் மனைவி உடல்நலக்கோளாறால் காலமானார்!

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மனைவி உடல்நலக்குறைவால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மனைவி ஜீவா மதுசூதனன் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் அவர் காலமானதாக மருத்துவமனை அறிவித்துள்ளது. இதனை அடுத்து மதுசூதனன் குடும்பத்திற்கு அதிமுக பிரபலங்கள் மற்றும் தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மகனும் எம்பியுமான பி ரவீந்திரநாத் அவர்கள் மதுசூதனன் அவர்களின் துணைவியார் காலமானதற்கு தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:

கழக அவை தலைவர், மதிற்பிற்குரிய திரு.மதுசூதனன் அவர்களின் துணைவியார் காலமானார் என்ற செய்தி பெரும் வருத்தத்தை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com