Connect with us

செய்திகள்

மழையில் மயங்கி விழுந்தவரை தோளில் தூக்கி சென்ற பெண் காவல் ஆய்வாளர்.. வைரல் வீடியோ…

Published

on

lady police

வட கிழக்கு பருவமழையால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்து வருகிறது. சென்னையின் பல பகுதிகளிலும் சாலையில் நீர் வெள்ளம் போல் ஒடுகிறது. சில இடங்களில் இடுப்பளவு தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. பல பகுதிகளில் மழை நீர் வீட்டிற்குள் புகுந்துள்ளது. எனவே, பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அதோடு, புதிதாக உருவாகியுள்ள புயல் இன்று மாலை சென்னையை கரை கடக்கவுள்ளது. எனவே, புயல் கரையை கடக்கும் போது 40 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும், அதுவரை கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது ஒருபுறம் எனில், சென்னையில், திறந்தவெளியில் தங்கியிருந்த மற்றும் பணி செய்து கொண்டிருந்த பலரும் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். செல்லும் இடம் இல்லாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு சுடுகாட்டில் பணிபுரிந்து வந்த வாலிபர் ஒருவர் நீண்ட நேரம் மழையில் நனைந்ததால் கல்லறையில் மயங்கி விழுந்தார். அவரை பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தனது தோளில் தூக்கி சென்று ஆட்டோவில் ஏற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அவருக்கு அங்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதைதொடர்ந்து அந்த ஆய்வாளர் ராஜேஸ்வரியை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வாலிபரை அவர் தோளில் தூக்கி சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வணிகம்16 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?