குஷ்புவுக்கு வழங்கப்பட்ட புதிய பதவி: அந்த தொகுதி உறுதியாகிவிட்டதா?

குஷ்புவுக்கு வழங்கப்பட்ட புதிய பதவி: அந்த தொகுதி உறுதியாகிவிட்டதா?

சமீபத்தில் பாஜகவில் சேர்ந்த நடிகை குஷ்பு வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. மேலும் அவர் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து அந்த பகுதியில் அவர் அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன் குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளார். சேப்பாக்கம் தொகுதியின் இன்சார்ஜ் ஆக தன்னை பாஜக தலைமை நியமனம் செய்து இருப்பதாகவும், இதனை அடுத்து இன்று அந்த பகுதியில் புதிய அலுவலகம் ஒன்றை திறக்க இருப்பதாகவும் குஷ்பு அறிவித்துள்ளார்.

தனது நண்பரும் பாஜக பிரமுகருமான சுதாகர் ரெட்டி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தனக்கு அந்த பகுதி மக்கள் ஆதரவு தர வேண்டும் என்றும் தன்னுடன் இருக்க வேண்டும் என்றும் அந்த பகுதி மக்களுடன் தான் கண்டிப்பாக இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சேப்பாக்கம் தொகுதியில் குஷ்பு போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக வதந்திகள் வெளிவந்த நிலையில் குஷ்புவின் இந்த ட்விட் கிட்டத்தட்ட அந்த செய்தியை உறுதியாக்கி உள்ளது. மேலும் சேப்பாக்கம் தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவார் என்று கூறப்படும் நிலையில் குஷ்பு மற்றும் உதயநிதி போட்டி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதால் அந்த தொகுதி விஐபி தொகுதியாக இப்போதே மாறிவிட்டது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com