கோவிந்தசாமி கதவ திற.. சதம் அடித்த அஸ்வின்.. மைக்கேல் வாகன் பக்கம் லைட்டை திருப்பிய ரசிகர்கள்

கோவிந்தசாமி கதவ திற.. சதம் அடித்த அஸ்வின்.. மைக்கேல் வாகன் பக்கம் லைட்டை திருப்பிய ரசிகர்கள்

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் அஸ்வின் சதம் அடித்ததையடுத்து முன்னாள் இங்கிலாந்து வீரரான மைக்கேல் வாசகனை இந்திய ரசிகர்கள் டிவிட்டரில் கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்தியா இங்கிலாந்து இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 2 போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது. முன்னதாக முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக மோசமான தோல்வியை சந்தித்தது. அந்த போட்டியின் போது சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் குறித்து பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்தது.

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பிட்சில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் இந்திய அணியால் முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் குவிக்க முடிந்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்தியாவின் ஸ்பின் பவுலிங்கை முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தன. அஸ்வின் 5 விக்கெட்டுகளும், அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனால் மீண்டும் சென்னை பிட்ச் மீதான விமர்சனங்கள் எழ தொடங்கியது. குறிப்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் வாகன் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். இந்த மைதானங்களில் எல்லாம் பேட்டிங் செய்யவே முடியாது. பேட்டிங் செய்யவே தகுதியற்ற பிட்ச் போன்றெல்லாம் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

ஆனால் இன்று இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும் பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் அஸ்வின் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தனர். குறிப்பாக அஸ்வின் சதம் அடித்து அசத்தியிருந்தார். எந்த பிட்ச் பேட்டிங் செய்ய தகுதியற்றது என மைக்கேல் வாகன் கூறியிருந்தாரோ அதே மைதானத்தில் விராட் கோலி – அஸ்வின் ஜோடி 96 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அஸ்வின் – சிராஜ் ஜோடி 49 ரன்களும் எடுத்து அசத்தியிருந்தனர்.

இதனால் இப்போது எப்படி பேட்டிங் செய்ய முடிந்தது என்று இந்திய ரசிகர்கள் பலரும் மைக்கேல் வாகனிடம் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். இன்னும் சிலர் 2018 ஆம் ஆண்டு போட்டியின் போது லார்ட்ஸ் மைதானம் இருந்த விதத்துடன் சேப்பாக்கம் மைதானத்தை ஒப்பிட்டும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதன் காரணமாக டிவிட்டரிலும் மைக்கேல் வாகன் பெயர் தேசிய அளவில் டிரண்டானது.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 286 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு 482 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து 53 ரன்கள் எடுத்துள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com