கோரத்தாண்டவமாடி கரையை கடந்த யாஸ் புயல்: வேறோடு சாய்ந்த மரங்களால் பரபரப்பு

கோரத்தாண்டவமாடி கரையை கடந்த யாஸ் புயல்: வேறோடு சாய்ந்த மரங்களால் பரபரப்பு

வங்க கடலில் உருவான புயல் சற்றுமுன்னர் ஒடிசாவில் கடந்த நிலையில் அந்த புயல் கோரத்தாண்டவம் ஆடி வேறோடு நூற்றுக்கணக்கான மரங்களை சாய்த்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஒடிசா மாநிலத்தில் உள்ள பத்ராக் என்ற மாவட்டத்தில் உள்ள பகுதியில் சற்று முன்னர் புயல் கரை கடந்தது. புயல் கரையை கடந்த போது சுமார் 155 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியதால் வேரோடு மரங்கள் சாய்ந்தன. அதுமட்டுமின்றி நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்ததால் ஒடிசாவின் பல பகுதிகளில் தற்போது மின் இணைப்பு இல்லாமல் உள்ளது. ஒரிசாவின் வடக்கு மாவட்டங்களிலும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புயல் கரையை கடந்த போதிலும் கடலலைகள் தற்போதும் சீற்றத்துடன் இருப்பதாகவும் இந்த புயல் தற்போது வலுவிழந்து நள்ளிரவு நேரத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜெனா என்ற பகுதியைத் தாக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே புயல் காரணமாக ஒடிசாவில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த சுமார் 6 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பதும் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மேடான பகுதிக்கு மாற்றப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பல பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பதால் உயிரிழப்புகள் அனேகமாக இருக்காது என்றே கருதப்படுகிறது. இருப்பினும் கனமழை காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து கரைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் பல கிராமங்கள் தற்போது தீவு போல் காட்சி அளிப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com