தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் நிறுத்தப்படும்: அதிகாரி உத்தரவால் ஊழியர்கள் அதிர்ச்சி

தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் நிறுத்தப்படும்: அதிகாரி உத்தரவால் ஊழியர்கள் அதிர்ச்சி

தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் நிறுத்தப்படும் என உயர் அதிகாரி ஒருவர் கூறியதை அடுத்து அவருக்கு கீழ் வேலை செய்யும் பணியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பழங்குடி நலத்துறை அதிகாரி ஒருவர் தனது ஊழியர்களிடம் தடுப்பூசி போடும்படி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை அடுத்து ஊழியர்கள் பலர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஆனால் ஒருசில தடுப்பூசி போடவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் தனக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்கள் தடுப்பூசி போட தவறினால் அடுத்த மாதத்திற்கான சம்பளம் நிறுத்தப்படும் என எச்சரிக்கை செய்தார். அதிகாரியின் இந்த எச்சரிக்கையை அடுத்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அனைவரும் தற்போது தடுப்பூசி போட்டு விட்டதாகவும் அவருக்கு கீழ் பணிபுரியும் 99 சதவீத ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. தடுப்பூசி போட வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மக்கள் மெத்தனமாக இருப்பதாகவும் இது போன்ற எச்சரிக்கை விடுத்தால் மட்டுமே தடுப்பூசி போடுவார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.

ஏற்கனவே நடிகை தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற குஷ்பூ ஆலோசனை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com