புதிய சட்டவிதிகள்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ் அப் முறையீடு!

புதிய சட்டவிதிகள்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ் அப் முறையீடு!

வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு புதிய விதிகள் மத்திய அரசால் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. இந்த விதிகளை ஏற்றுக் கொள்ளாத சமூக வலைதளங்கள் இந்தியாவில் தடை செய்யப்படும் என்றும் அதுமட்டுமின்றி குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆனால் நேற்று வரை பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மத்திய அரசின் புதிய சட்ட விதிகளை ஏற்றுக் கொள்வது குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. இதனால் இன்று முதல் இந்த சமூக வலைதளங்கள் தடை செய்யப்படுமா? என்ற கேள்வி பயனாளிகள் மத்தியில் எழுந்தது.

இந்த நிலையில் முதல் படியாக வாட்ஸ்அப் நிறுவனம் இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றுள்ளது. புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிர்வாகம் முறையீடு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த முறையீட்டில் புதிய விதிகள் தனியுரிமை தகவல் பாதுகாப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் செயல் என்றும், இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முறையீடு மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com