மேற்குவங்கத்தில் பாஜக எம்.எல்.ஏக்கள் இருவர் திடீர் ராஜினாமா: என்ன காரணம்?

மேற்குவங்கத்தில் பாஜக எம்.எல்.ஏக்கள் இருவர் திடீர் ராஜினாமா: என்ன காரணம்?

மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் அந்த தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அபாரமாக வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை 213 இடங்களிலும் பாஜக 77 இடங்களில் வெற்றி பெற்றது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி வெற்றி பெற்ற இரண்டு பாஜக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநில தேர்தலில் வெற்றி பெற்ற ஜகந்நாத் சர்க்கார் மற்றும் நிசித் பிரமானிக் ஆகிய இருவரும் தங்களுடைய எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்தனர். ஏற்கனவே இவர்கள் இருவரும் எம்பி ஆக இருப்பதால் எம்பி பதவியை தொடரும் நோக்கில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளதாக மேற்குவங்க பாஜக தலைமை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது இரண்டு வேட்பாளர்கள் உயிரிழந்ததால் அந்த தொகுதிகளுக்கு தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் நான்கு தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே எம்பியாக உள்ளவர்கள் சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வது தேவையில்லாத செலவு என்று பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com