ஆந்திரா எண்ணெய் ஆலையில் பெரும் தீ விபத்து!

புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு அலகில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது
ஆந்திரா எண்ணெய் ஆலையில் பெரும் தீ விபத்து!

ஆந்திராவில் அமைந்துள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் லிமிடட் நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய் ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விஷாக்கப்பட்டனத்தில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் லிமிடட் நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்று உள்ளது.

அங்குப் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு அலகில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

விபத்து பற்றி தகவல் அறிந்து விரைந்த தீயனைப்பு துறையினர், விபத்தைக் கட்டுப்படுத்தி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவ இடத்தை சுற்றி கரும் புகை சூழ்ந்துள்ளதால், அருகில் வசிக்கும் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com