தடுப்பூசி போட வந்த அதிகாரியை கண்டவுடன் தெறித்து ஓடிய மக்கள்: காரணம் இதுதான்!

தடுப்பூசி போட வந்த அதிகாரியை கண்டவுடன் தெறித்து ஓடிய மக்கள்: காரணம் இதுதான்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருவதை அடுத்து கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வை மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்தி வருகின்றன. பெரும்பாலான பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு முன் வந்துள்ளனர் என்பதும் பலர் தடுப்பூசி முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் போட்டு விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கவை.

இந்த நிலையில் பல விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் இன்னும் கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டு அச்சப்படும் மக்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் பாரபாங்கி என்ற பகுதியில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி வந்த சுகாதாரத்துறை அதிகாரிகளை கண்டவுடன் ஆற்றில் குதித்து தப்பி ஓடிய பொது மக்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட வந்தவர்களை விஷ ஊசி போட வந்தவர்கள் என வதந்தி பரவியதையடுத்து பொதுமக்கள் ஆற்றில் குதித்து தப்பி ஓடினார்கள். அதன்பின் சுகாதாரத்துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்தி தாங்கள் விஷ ஊசி போட வரவில்லை என்றும் தடுப்பூசி போட தான் வந்துள்ளோம் என்றும் இந்தத் தடுப்பூசியைப் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து காப்பாற்றும் என்றும் விளக்கம் அளித்தனர். அதன் பின்னரே ஒரு சிலர் சமாதானமடைந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்துள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் விஷ ஊசி செலுத்த வருவதாக பரவிய வதந்தியால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com