மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசி விற்பனை இல்லை: அமெரிக்க நிறுவனங்கள் அறிவிப்பு

மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசி விற்பனை இல்லை: அமெரிக்க நிறுவனங்கள் அறிவிப்பு

இந்தியாவில் உள்ள மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசி விற்பனை இல்லை என்றும் இந்திய அரசுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அமெரிக்காவின் முன்னணி தடுப்பூசி நிறுவனமான மாடர்னா அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பஞ்சாப் மாநிலத்தில் தினமும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததை அடுத்து வெளிநாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்ய பஞ்சாப் முதல்வர் அமர்சிங் திட்டமிட்டார். இதற்கான உலகளாவிய டெண்டர்களும் விடப்பட்டன. ஸ்பூட்னிக் வி, பைசர், ஜான்சன் அண்ட் ஜான்சன் உள்ளிட்ட தடுப்பூசியை பெறுவதற்கு பஞ்சாப் அரசால் முயற்சிக்கப்பட்டது. இதில் மாடர்னா நிறுவனம் மட்டும் தற்போது பதிலளித்துள்ளது. அதில் இந்தியாவில் உள்ள மாநில அரசுடன் தடுப்பூசி ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்ய வாய்ப்பில்லை என்றும் இந்திய அரசுடன் மட்டுமே ஒப்பந்தம் செய்ய முடியும் என்றும் அறிவித்துள்ளது. இதனால் பஞ்சாப் மாநிலத்திற்கு உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசி கிடைக்காது என தெரிகிறது

ஏற்கனவே தமிழக அரசும் சமீபத்தில் உலகளாவிய டெண்டர் விடப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில் தமிழக அரசுக்கும் இதே பதில்தான் கிடைக்கும் என்று கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com