கொரோனா பரவல் எதிரொலி.. யு.பி.எஸ்.சி தேர்வு தேதி ஒத்திவைப்பு!

மத்திய அரசின் முதன்மையான பணிகளுக்கான ஆட்களைத் தேர்வு செய்யும் நிறுவனம் யு.பி.எஸ்.சி (இந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்).
கொரோனா பரவல் எதிரொலி.. யு.பி.எஸ்.சி தேர்வு தேதி ஒத்திவைப்பு!

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் யு.பி.எஸ்.சி தேர்வு தேதி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே ஜூன் 27-ம் தேதி நடைபெற இருந்த யு.பி.எஸ்.சி முதல் நிலைத் தேர்வுக்கான தேதி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட முதன்மையான பணிகளுக்கான ஆட்களைத் தேர்வு செய்யும் நிறுவனம் யு.பி.எஸ்.சி (இந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்). இந்த நிறுவனத்தின் கீழ் பல்வேறு மத்திய அரசு நிறுவனங்களில் காலியாக இருந்த பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் நிலைத் தேர்வு ஜூன் 27-ம் தேதி நடைபெறுவதாக அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதனைக் கருத்தில் கொண்டு முக்கிய முடிவை எடுத்த யு.பி.எஸ்.சி ஜூன் 27-ம் தேதி நடைபெற இருந்த தேர்வை அக்டோபர் 10-ம் தேதி வரை ஒத்தி வரித்துள்ளது.

இந்த காலிப் பணியிடங்களுக்காக விண்ணப்பித்துள்ளவர்கள், தொடர்ந்து தேர்வுக்கு தயார்ப்படுத்திக்கொள்ளுங்கள், தொடர்ந்து யு.பி.எஸ்.சி முதன்மை தேர்வு குறித்த பிற அறிவிப்புகளை அவ்வப்போது தெரிந்துகொள்ளுங்கள் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com