பெண்களுக்கு செல்போன் கொடுக்க கூடாது: உ.பி பெண்கள் ஆணைய உறுப்பினர் பேச்சு

பெண்களுக்கு செல்போன் கொடுக்க கூடாது: உ.பி பெண்கள் ஆணைய உறுப்பினர் பேச்சு

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பெண்கள் ஆணைய உறுப்பினர் ஒருவர், பெண்களுக்கு மொபைல் போன்கள் கொடுக்க கூடாது என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து கேட்ட கேள்விக்கு, அம்மாநில பெண்கள் ஆணைய உறுப்பினர் மீனா குமாரி, 'பெண்களுக்கு மொபைல் போனை கொடுக்க கூடாது. அவர்களிடம் மொபைல் போன் இருப்பதால், முதலில் ஆண்களிடம் பேசுகிறார்கள். பின்னர் அவர்களுடன் ஓடிப் போய் விடுகிறார்கள்.

எனவே நான் பெற்றோர்களுக்குத் தெரிவிக்க வேண்டியது என்னவென்றால், உங்கள் பெண் குழந்தைகளுக்கு தயவு செய்து மொபைல் போன்களைக் கொடுக்காதீர்கள் என்பதைத் தான் சொல்ல விரும்புகிறேன். அப்படி கொடுத்தாலும், பெண் குழந்தைகளின் போன்கள் அடிக்கடி சோதனை செய்யப்பட வேண்டும். அம்மாக்களின் அலட்சியமே பெண்களுக்கு எதிரான வன்முறையாக மாறுகிறது.

நாம் ஒரு சமூகமாக நம் பெண் பிள்ளைகள் மீது ஒரு கண் வைக்க வேண்டும். அவர்கள் எங்கே போகிறார்கள், எந்த மாதிரி பையன்களிடம் பழகுகிறார்கள் என்று கண்காணிக்க வேண்டும்' என்று சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com