கொரோனா தடுப்பூசி டோஸ்களுக்கு இடையில் 12 - 16 வார இடைவெளி அவசியம்: அரசு தகவல்

கோவிஷீல்டு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த போது 28 நாட்களில் இரண்டாவது டோஸ் போடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
கொரோனா தடுப்பூசி டோஸ்களுக்கு இடையில் 12 - 16 வார இடைவெளி அவசியம்: அரசு தகவல்

இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றாக 'கோவிஷீல்டு' தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கு மத்தியில் 12 முதல் 16 வார இடைவெளி அவசியம் என்று மத்திய அரசு புதிய தகவலை தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு தரப்பு, 'இப்படி கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடுவதற்கு இடையிலான இடைவெளியை அதிகரிக்கும் பட்சத்தில், கொரோனா தடுப்பூசி முகாமை மத்திய அரசால் இன்னும் திறம்பட செயல்படுத்த முடியும்.

இந்த வழிமுறையை பல நாடுகள் பின்பற்றுகின்றன. கனடா நாடு, கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியை முன்று முதல் நான்கு மாதங்கள் என்று வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படிச் செய்வதன் மூலம் நமக்கு கிடைக்கும் கால அளவை வைத்து கொரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் சப்ளையை நன்றாக நிர்வகிக்க முடியும்' என்று தெரிவித்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த போது 28 நாட்களில் இரண்டாவது டோஸ் போடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர், 6 முதல் 8 வாரங்களுக்குப் பின்னர் இரண்டாவது டோஸ் போடப்பட வேண்டும் என்று அரசு கூறியது. தற்போது அந்த இடைவெளியை மேலும் அதிகரித்துள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com