இந்தியாவில் மேலும் இரண்டு தடுப்பூசிகள்: ஒற்றை டோஸ் போதும் என தகவல்!

இந்தியாவில் மேலும் இரண்டு தடுப்பூசிகள்: ஒற்றை டோஸ் போதும் என தகவல்!

இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவாக்ஸின் மற்றும் ஸ்புட்னிக் வி’ ஆகிய மூன்று தடுப்பூசிகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இரண்டு தடுப்பூசிகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேபோல் அமெரிக்க நிறுவனமான ஃபைசர் நிறுவனமும் அடுத்த ஆண்டு இந்தியாவில் 5 கோடி தடுப்பூசிகளை வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஃபைசர் நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே செலுத்தலாம் என்று கூறப்படுகிறது.

உலகின் பல நாடுகளில் செலுத்தப்படும் மடர்னா என்ற தடுப்பூசி மற்றும் ஃபைசர் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதில் மடர்னா தடுப்பூசியை ஒற்றை டோஸ் மட்டும் போட்டால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் இந்தியாவில் தடுப்பூசியை அறிமுகப்படுத்த விரும்புவதாகவும் அதற்காக இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனமான ’சிப்லா’ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இந்த இரு நிறுவனங்களிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இழப்பீடு உள்ளிட்ட சிக்கல்கள் குறித்து தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இந்த பேச்சுவார்த்தை முடிவடைந்ததும் விரைவில் ஒப்பந்தம் போடப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவில் தற்போது 20 கோடி மக்களுக்கும் மேல் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் மேலும் இரண்டு தடுப்பூசி நிறுவனங்கள் இந்தியாவில் களத்தில் குதிக்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com