தடை செய்ய துடிக்கும் மத்திய அரசு; மவுனம் கலைத்த Twitter!

தடை செய்ய துடிக்கும் மத்திய அரசு; மவுனம் கலைத்த Twitter!

ட்விட்டர் சமூக வலைதள நிறுவனத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையில் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், நடக்கும் பிரச்சனை குறித்தும் மத்திய அரசுக்கு எதிராகவும் ட்விட்டர் நிறுவனம் கொதித்து எழுந்துள்ளது.

மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து ட்விட்டர் தளத்தில் எதிர்ப் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், புதிய டிஜிட்டல் ஐடி விதிமுறைகளை அரசு விதித்துள்ளது. இதற்கு எதிராக பேசியுள்ள ட்விட்டர் நிறுவனம், 'மத்திய அரசின் போக்கு கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. மேலும் காவல் துறையினர், மிரட்டல் நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். நாங்கள் இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படவே விரும்புகிறோம். அதே நேரத்தில் சுதந்திரமாக பேசும் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்.

இந்திய மக்களுக்கு நாங்கள் தொடர்ந்து சேவையாற்றக் கடமைப்பட்டு இருக்கிறோம். பெருந்தொற்று காலத்தில் ட்விட்டர் தளம் இன்றியமையாததாகவும், மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் இருந்தது.

இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு மக்களுக்காக நாங்கள் பணியாற்ற விரும்புகிறோம். அதே நேரத்தில் சட்டத்துக்கு உட்பட்டே கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்க நாங்கள் துணை நிற்போம். தற்போது அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மூலம் இந்தியாவில் உள்ள எங்களது ஊழியர்களுக்காக நாங்கள் கவலை கொண்டுள்ளோம். புதிய ஐடி விதிமுறைகளில் எங்களுக்கு முரண்பாடுகள் உள்ளன. நாங்கள் இதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள இருக்கிறோம்' என்று தெரிவித்துள்ளது.

சமீபத்தில் பாஜக-வின் முக்கிய உறுப்பினர்கள் ட்விட்டரில் பதிவிட்ட சில கருத்துகளுக்கு, அந்நிறுவனம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் மத்திய அரசு கோபமடைந்து உள்ளதாகவும், அதனாலேயே ட்விட்டர் நிறுவனத்தைப் பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ட்விட்டர் நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்தை மத்திய அரசின் செயல்படும் காவல் துறை சமீபத்தில் சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com