இந்தியாவில் ஜூன் மாதம் முதல் ஒரே டோஸ் கொண்ட கொரோனா தடுப்பூசி..!

இந்தியாவில் ஜூன் மாதம் முதல் ஒரே டோஸ் கொண்ட கொரோனா தடுப்பூசி..!

இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள கொரோடா தடுப்பூசிகள் அனைத்தும் இரண்டு டோஸ்கள் போடப்பட வேண்டும். இந்நிலையில் ரஷ்ய உருவாக்கியுள்ள 'ஸ்பட்னிக் லைட்' கொரோனா தடுப்பூசி ஒரே டோஸ் செலுத்தினால் போதும் என்றும், அது இந்தியாவில் ஜூன் மாத வாக்கில் பயன்பாட்டிற்கு வரலாம் என்று தகவல்கள் வந்துள்ளன.

இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்பட்னிக் வி மற்றும் ஸ்பட்னிக் லைட் கொரோனா தடுப்பூசி மருந்துகளை விநியோகம் செய்யும் உரிமையை டாக்டர் ரெட்டி நிறுவனம் பெற்றுள்ளது. அந்த நிறுவனத்தில் சி.இ.ஓ இது குறித்துப் பேசுகையில்,

'ரஷ்யாவுடன் இந்த விவகாரத்தில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ரஷ்யாவில் ஸ்பட்னிக் லைட் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனமதி கொடுக்கப்பட்டு உள்ளது. அது 79.4 சதவீதம் திறன் கொண்டது என்பதையும் நிரூபித்துள்ளது. இது ஒரேயொரு முறை போடப்படும் தடுப்பூசி.

இது ஸ்பட்னிக் தடுப்பூசியின் முதல் டோஸ் தான். இரண்டாவது டோஸ் போட்டால் அதன் திறன் 91.6 சதவீதம் அளவுக்கு உயரக்கூடும்' என்று தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசி மூலம் இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் மிகப் பெரும் திருப்பம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com