பிளஸ் 2 மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் சிக்கல்: நிபுணர்கள் தகவல்!

பிளஸ் 2 மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் சிக்கல்: நிபுணர்கள் தகவல்!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு விரைவில் நடைபெறும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் பொதுத் தேர்வுக்கு முன் மாணவ மாணவிகள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய மருத்துவ நிபுணர்கள் பொதுத் தேர்வுக்கு முன் பிளஸ் டூ மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது சிக்கல் இருப்பதாக கூறியுள்ளனர்.

தற்போது உள்ள கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் 18 வயதிற்கு மேலானவர்களுக்கு மட்டுமே போடும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பலர் 18 வயதுக்கும் குறைவாக உள்ளனர். எனவே அவர்களுக்கு இந்த ஊசி பயன்படுத்துவது குறித்த பரிசோதனையை இன்னும் முடிக்கவில்லை என்பதால் பிளஸ் டூ மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது சிக்கல் இருப்பதாக கூறியுள்ளனர்.

கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே பயன்படுத்துவதற்கான உரிமம் இருப்பதாகவும் எனவே பெரும்பாலான பிளஸ் டூ மாணவர்கள் 18 வயதுக்குக் குறைவாக இருப்பதால் அவர்களுக்கு இந்த தடுப்பூசி போடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளனர். எனவே பிளஸ் டூ மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கு முன் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது போடுவது சாத்தியமில்லை என்றே தெரிகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com