எந்த விநியோகிஸ்தர்களிடம் இருந்தும் இனி சிலிண்டர் வாங்கலாம்: விரைவில் அமல்!

எந்த விநியோகிஸ்தர்களிடம் இருந்தும் இனி சிலிண்டர் வாங்கலாம்: விரைவில் அமல்!

சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாம் எந்த நிறுவனத்தில் முன்பணம் கொடுத்து பதிவு செய்துள்ளோமோ, அந்த நிறுவனத்தில் தான் வாங்க வேண்டும் என்ற விதிமுறை தற்போது அமலில் உள்ளது. ஆனால் விரைவில் எந்த நிறுவனத்திடம் இருந்தும் காலி சிலிண்டர்களை கொடுத்து நிரப்பப்பட்ட சிலிண்டரை பெற்றுக்கொள்ளலாம் என்ற சலுகை அமல்படுத்த இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் விநியோகஸ்தர்களிடம் காலியான சிலிண்டர்களை கொடுத்து நிரப்பப்பட்ட சமையல் சிலிண்டர்களை வாங்கும் வசதியை செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த கோரிக்கை தற்போது நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதனை அடுத்து நாம் பதிவு செய்து வைத்துள்ள விநியோகஸ்தரிடம் இருந்து மட்டுமே காலி சிலிண்டர்களை மாற்றி புதிய சிலிண்டர்களை வாங்க முடியும் என்பதை மாற்றி தற்போது எந்த விநியோகஸ்தர்களிடம் இருந்து சிலிண்டர்களை கொடுத்து புதிய சிலிண்டரை வாங்கிக் கொள்ளலாம் என்ற முறை விரைவில் அமலுக்கு வர உள்ளது. தற்போது பரிசோதனையாக இந்த திட்டம் கோவை, சண்டிகர், குருகிராம், புனே மற்றும் ராஞி ஆகிய ஐந்து நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று பெட்ரோல் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வசதி நாடு முழுவதும் வந்துவிட்டால் பயனாளர்களுக்கு மிகப்பெரிய வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com