கொரோனாவுக்கு ரூ.10 மட்டுமே சிகிச்சை கட்டணம் பெறும் அதிசய டாக்டர்!

கொரோனாவுக்கு ரூ.10 மட்டுமே சிகிச்சை கட்டணம் பெறும் அதிசய டாக்டர்!

கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் டிஸ்சார்ஜ் செய்து வெளியே வரும்போது லட்சக்கணக்கில் பணம் கறந்துவிடுவது வழக்கமாக உள்ளது. அரசு என்னதான் கொரோனாவுக்கு கட்டணத்தை நிர்ணயம் செய்தாலும் அதை பின்பற்றாமல் பல மருத்துவமனைகள் நோயாளியிடம் இருந்து பணம் பிடுங்குவதையே குறிக்கோளாக உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ரூபாய் 10 மட்டுமே பெற்றுக் கொண்டு கொரோனாவுக்கு ஆலோசனை வழங்கும் டாக்டர் ஒருவர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த விக்டர் இமானுவேல் என்ற டாக்டர் ஒரு சிறிய மருத்துவமனையை நடத்தி வருகிறார். அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை கூறுகிறார். அதற்காக அவர் வெறும் 10 ரூபாய் மட்டுமே ஆலோசனை கட்டணம் பெறுகிறார். மேலும் ஏழை எளியவர்கள் ஆக இருந்தால் அந்த பத்து ரூபாய் கூட அவர் வாங்குவதில்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு பல தன்னார்வலர்கள் உதவி செய்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி ஏழை எளிய மக்கள் சிகிச்சைக்காக வந்தால் அவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கின்றார் என்பதும், அதேபோல் விவசாயிகள், எல்லையில் போராடும் ராணுவ வீரர்கள், ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் சிகிச்சை பெற வந்தால் அவர்களிடம் அவர் ஒரு பைசாகூட சிகிச்சை கட்டணமாக பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மருத்துவரை அந்த பகுதியில் உள்ள அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com