கொரோனாவால் இறக்கும் ஊழியர்களின் குடும்பத்திற்கு தொடர்ந்து சம்பளம்: டாடா அறிவிப்பு

கொரோனாவால் இறக்கும் ஊழியர்களின் குடும்பத்திற்கு தொடர்ந்து சம்பளம்: டாடா அறிவிப்பு

கொரோனாவால் உயிரிழக்கும் ஊழியர்களின் குடும்பத்திற்கு தொடர்ந்து சம்பளம் வழங்கப்படும் என டாடா நிறுவனம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொரோனா காலத்தில் பொது மக்களுக்கு உதவி செய்வதில் டாடா நிறுவனம் முதன்மையாக இருக்கிறது என்றும் கொரோனா முதல் அலையின் போது ஆயிரத்து 500 கோடி மத்திய அரசுக்கு கொரோனா தடுப்பு நிதியாக டாடா நிறுவனம் அளித்தது என்பதும் தெரிந்ததே. அதேபோல் இரண்டாவது அலையின்போதும், ஏராளமான ஆக்சிஜன் சிலிண்டர்களையும், மருத்துவ உபகரணங்களையும் அரசு மருத்துவமனைக்கு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் கொரோனாவால் தங்களது டாடா நிறுவன ஊழியர்கள் உயிரிழந்தால் அவர்களது 60 வயது வரை அவரது குடும்பத்திற்கும் சம்பளம் வழங்கப்படும் என டாடா ஸ்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது. மறைந்த ஊழியர்கள் கடைசியாக பெற்ற சம்பளம் எவ்வளவோ அதே சம்பளம் அவர்களது 60 வயது வரை வழங்கப்படும் என்றும் அதே போல் இறந்தவரின் குடும்பத்திற்கு மருத்துவ வசதிகள் வீட்டுவசதி உள்ளிட்டவையும் வழங்கப்படும் என டாடா ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் டாட்டா ஸ்டீல் நிறுவன பணியாளர்கள் முன்கள பணியாளர்களாக பணியாற்றி அவர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தால் அவர்களின் பிள்ளைகளின் பட்டப்படிப்பு வரையிலான அனைத்து செலவையும் டாடா நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் என அறிவித்துள்ளது. டாடா நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com