கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்: மற்ற மாநிலங்களின் நிலை என்ன?

கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்: மற்ற மாநிலங்களின் நிலை என்ன?

உலக அளவில் இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வரும் நிலையில் இந்திய அளவில் தமிழ்நாடு ஒருநாள் கொரோனா பாதிப்பில் மிக அதிகமாக இருந்து வருவது பெரும் அதிர்ச்சிக்கு உரிய செய்தியாக உள்ளது. கடந்த சில நாட்களாக 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது சுமார் 400 பேர் தமிழகத்தில் மட்டும் உயிரிழந்து வருகின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு குறைவில்லை என்பது அரசின் நடவடிக்கை சரியில்லையா? அல்லது பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லையா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தமிழகத்தை விட மிக அதிகமாக கொரோனா பாதிப்பு இருந்த கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. முக்கிய மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்.

தமிழ்நாடு - 35,483

மகாராஷ்டிரா - 26,672

கர்நாடகா - 25,979

கேரளா - 25,820

ஆந்திரபிரதேசம் - 18,767

மேற்குவங்கம் - 18,422

ஒடிஷா - 12,852

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com