INI CET தேர்வை நடத்த கூடாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

INI CET தேர்வை நடத்த கூடாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

INI CET தேர்வை நடத்த கூடாது என சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மருத்துவ பட்ட மேற்படிப்பு படிப்புகாக நடத்தப்படும் தேர்வுகளில் ஒன்று INI CET. இந்த தேர்வு ஜூன் 16-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இந்த தேர்வை நடத்த கூடாது என்றும் கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த நேரத்தில் தேர்வை நடத்துவது மாணவர்களுக்கு ஆபத்தாக முடியும் என்றும் பெற்றோர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டது. இருப்பினும் இந்த தேர்வை மத்திய அரசு திட்டமிட்டபடி நடத்தவே முடிவு செய்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்த வழக்கு ஒன்றில் சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் INI CET தேர்வை ஒத்தி வைக்க உத்தரவிட்டது. மேலும் 16 ஆம் தேதி இந்த தேர்வை நடத்த கூடாது என்று கூறிய சுப்ரீம் கோர்ட் INI CET தேர்வை ரத்து செய்யுமாறும், குறைந்தது ஒரு மாதம் கழித்து இந்த தேர்வை நடத்தலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com