இந்தியாவின் புதிய டிஜிட்டல் கொள்கை குறித்து சுந்தர் பிச்சை கருத்து!

இந்தியாவின் புதிய டிஜிட்டல் கொள்கை குறித்து சுந்தர் பிச்சை கருத்து!

இந்தியாவின் புதிய டிஜிட்டல் கொள்கை குறித்து பல்வேறு சமூக வலைதளங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு சமீபத்தில் அறிவித்த புதிய டிஜிட்டல் கொள்கை குறித்து வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை இது குறித்து கூறிய போது ’கூகுள் எந்த நாடுகளில் செயல்படுகிறதோ அந்த நாடுகளின் உள்ளூர் சட்டங்களை மதித்து வருகிறது. குறிப்பாக சுதந்திரமான வெளிப்படையான இன்டர்நெட் என்பது அடிப்படை ஆதாரமாக இருக்க வேண்டும் என்பதில் கூகுள் நிறுவனத்திற்கு மாற்று கருத்து இல்லை.

அதேபோல் இந்தியாவின் நீண்ட பாரம்பரியமான கொள்கைகள் குறித்து எங்களுக்கு திருப்தி நிலவுவதாகவும் சுந்தர் பிச்சை பாராட்டு தெரிவித்தார். ஆனால் அதே நேரத்தில் இந்தியாவின் புதிய டிஜிட்டல் குறித்து கொள்கைகள் குறித்து இப்போது எதுவும் கூற முடியாது என்றும் கூகுளின் இந்திய பிரிவினர் அந்த கொள்கைகளை ஆய்வு செய்து வருவதாகவும் அதன் பின்னரே இது குறித்து தனது கருத்தை தெரிவிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com