மாநில அரசுகளே ஊரடங்கை அமல்படுத்தி கொள்ளலாம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

மாநில அரசுகளே ஊரடங்கை அமல்படுத்தி கொள்ளலாம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள நிலைமைக்கேற்ப ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த கொள்ளலாம் என பிரதமர் மோடி நேற்று உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டத்திற்கு பின் அறிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தத்தளித்துக் கொண்டு வருகின்றன என்பதும் ஒவ்வொரு நாளும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா பாதிப்புகள் குறித்து நேற்று உயர்மட்ட கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அதில் கொரோனா அதிகம் பாதிப்புடைய மாநிலங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஊரடங்கு அமல்படுத்துமாறு அறிவித்துள்ளார். மாநிலங்கள் தங்களுடைய மாநிலத்தில் உள்ள கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு ஊரடங்கு அறிவித்துக் கொள்ளலாம் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அங்கன்வாடி மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வழங்குமாறும் அவர் அறிவித்துள்ளார். மேலும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்குமாறு ஆக்சிஜன் மையிருப்பை அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்ளுமாறும் உபரியாக பயன்படாமல் சில மாநிலங்களில் இருக்கும் ஆக்சிஜனை தேவை இருக்கும் இடத்தில் மாற்றி விநியோகிக்குமாறும் பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com