நீதிமன்றம் கூறியபடி செய்யமுடியவில்லை என்றால் தூக்கிட்டு சாக வேண்டுமா? மத்திய அமைச்சர்

நீதிமன்றம் கூறியபடி செய்யமுடியவில்லை என்றால் தூக்கிட்டு சாக வேண்டுமா? மத்திய அமைச்சர்

நீதிமன்றம் கூறியபடி செய்ய முடியவில்லை என்றால் தூக்கிலிட்டு சாக வேண்டுமா என மத்திய அமைச்சர் ஒருவர் செய்தியாளர்களிடம் ஆவேசமாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டிய மத்திய அரசு அதில் கவனம் செலுத்தாமல் விஸ்டா என்ற ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கட்டடத்தை கட்டுவதில் கவனம் செலுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் சுப்ரீம் கோர்ட்டும் அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாத அரசுகளுக்கு தங்களது கண்டனங்களை கடுமையாக பதிவு செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பதவியில் இருப்பவர்கள் திண்டாட்டமாகி உள்ளனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சற்று முன் சந்தித்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா அவர்கள் நீதிமன்றம் கூறியபடி தடுப்பூசி வழங்க முடியவில்லை என்றால் தூக்கிட்டு சாக முடியுமா? என கேட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு நெட்டிசன்கள் காரசாரமான கமெண்ட்ஸ்களை பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய அரசில் உள்ள மத்திய அமைச்சர் ஒருவர் இப்படி பொறுப்பில்லாமல் பேசியுள்ளாரே என்று பெரும்பாலான நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com