பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி மோசடி செய்தவர் பிடிபட்டார்: ஆனால்....

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி மோசடி செய்தவர் பிடிபட்டார்: ஆனால்....

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 14 ஆயிரம் கோடி மோசடி செய்து விட்டு நாட்டை விட்டு தப்பி ஓடிய தொழிலதிபர் ஒருவர் பிடிபட்டதாகவும் ஆனால் அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி கடன் பெற்று மோசடி செய்தவர்கள் மெகுல் சோக்ஸி என்பவரை இந்திய அரசு தேடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் 2018 ஆம் ஆண்டு கரீபிய நாடுகளில் ஒன்றான ஆண்டிகுவா நாட்டிற்கு குடும்பத்துடன் தப்பி சென்றார். மேலும் அந்நாட்டில் அவர் குடியுரிமையும் பெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

டொமினிக் என்ற நாட்டில் மெகுல் சோக்ஸி என்பவரை உள்ளூர் போலீசார் மடக்கிப் பிடித்ததாகவும், அவரை ஆண்டிகுவா போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் ஆண்டிகுவாவில் இருந்து அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு இதுகுறித்து தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் இந்தியாவில் இருந்து தப்பிச்சென்ற மெகுல் சோக்ஸி என்பவரை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவர சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆண்டிகுவா நாட்டிலிருந்து அவர் வேறொரு நாட்டிற்கு செல்லும் போது அந்நாட்டின் காவல்துறையினர்களால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஏற்கனவே ரூ.11500 கோடி மோசடி செய்த நீரவ் மோடி என்பவர் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார் என்பது தெரிந்ததே.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com