ரெம்டெசிவர் மருந்தால் எந்த பயனும் இல்லை: உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி தகவல்

ரெம்டெசிவர் மருந்தால் எந்த பயனும் இல்லை: உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி தகவல்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக ரெம்டெசிவர் மருந்தை செலுத்த வேண்டும் என அனைத்து மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பரிந்துரை செய்து கொண்டிருக்கின்றனர். எனவே ரெம்டெசிவர் மருந்தை வாங்குவதற்காக சென்னை நேரு ஸ்டேடியத்தில் கூட்டம் அலைமோதி வருகிறது என்பதும் தினமும் 300 பேர்களுக்கு மட்டுமே அங்கு ரெம்டெசிவர் மருந்து விநியோகம் செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரெம்டெசிவர் மருந்தால் எந்தவித பயனும் இல்லை என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் தற்போதைய சூழலில் ரெம்டெசிவர் மருந்தால் எந்த பயனும் இல்லை என்றும் ரெம்டெசிவர் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுமே தவிர குணப்படுத்தாது என்றும் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

ரெம்டெசிவர் மருந்தை போடுவதற்கு பதிலாக அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கர்ப்பிணிகள் உட்பட யார் வேண்டுமானாலும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்றும் அதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார். நோய் வந்த பின்னர் ரெம்டெசிவர் மருந்துக்காக அலைந்து கொண்டு இருப்பதற்கு பதிலாக வருவதற்கு முன்பே தடுப்பூசி போட்டுக் கொண்டு அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் ரெம்டெசிவர் மருந்து வாங்குவதற்கு குவிந்து கிடக்கும் கூட்டத்தினர் இதனை புரிந்து கொண்டு அந்த மருந்தை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com