ஆக்சிஜனையும் காணவில்லை, மோடியையும் காணவில்லை: ராகுல்காந்தியின் கிண்டல் டுவிட்

ஆக்சிஜனையும் காணவில்லை, மோடியையும் காணவில்லை: ராகுல்காந்தியின் கிண்டல் டுவிட்

இந்தியாவில் தடுப்பூசியும் காணவில்லை, ஆக்சிஜனையும் காணவில்லை, மோடியையும் காணவில்லை என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கிண்டலுடன் கூடிய டுவிட் ஒன்றை பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த சில மாதங்களாகவே பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக கொரோனா இரண்டாவது அலையை அவர் சரியாக கையாளவில்லை என்றும் பிரச்சினைகளில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறார் என்றும் நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதில் மட்டுமே அவர் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் என்று விமர்சனம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் மோடியை விமர்சனம் செய்து டுவிட் பதிவு செய்துள்ளார். அதில் ஆக்ஸிஜன், தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளுடன் நாட்டின் பிரதமரையும் காணவில்லை என்றும் தற்போது இருப்பவை மத்திய விஸ்டா திட்டம், மருந்துகள் மீதான ஜிஎஸ்டி மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் தான் என்றும் அவர் கூறியுள்ளார். நாடு கடுமையான நெருக்கடியை சந்தித்து கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை கைவிட்டிருக்கின்றது என்று பிரதமர் மோடியை ராகுல்காந்தி விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com