என்னையும் கைது செய்யுங்கள்: பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி சவால்!

என்னையும் கைது செய்யுங்கள்: பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி சவால்!

டெல்லியில் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் என்னையும் கைது செய்யுங்கள் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் சவால் விட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பூசி இந்தியாவில் உள்ளவர்களுக்கே பற்றாக்குறையாக இருக்கும் நிலையில் மத்திய அரசு தடுப்பூசியை ஏற்றுமதி செய்துள்ளதற்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் எங்கள் குழந்தைகளுக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி செய்திகள் என கேள்வி எழுப்பி டெல்லியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இந்த போஸ்டர்களை ஓட்டியது யார் என்பதை கண்டுபிடித்து போலீசார் கைது செய்தனர். இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த செய்தி கேள்விப்பட்ட ராகுல்காந்தி அதிர்ச்சி அடைந்து என்னையும் கைது செய்யுங்கள் என பிரதமர் மோடிக்கு தனது டுவிட்டரில் சவால் விட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com