லட்சத்தீவுகளை அழிக்க நினைக்கும் அறிவற்றவர்கள்: மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் தாக்கு!

லட்சத்தீவுகளை அழிக்க நினைக்கும் அறிவற்றவர்கள்: மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் தாக்கு!

மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் லட்சத்தீவுகளை அழிக்க நினைக்கும் அறிவற்றவர்கள் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக லட்சத்தீவு விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லட்சத்தீவில் சமீபத்தில் நிர்வாகியாக பொறுப்பு ஏற்ற பிரஃபுல் கோடா படேல் என்பவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மாட்டிறைச்சிக்கு தடை, லட்சத்தீவில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம், பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கம் கலைப்பு, மது விலக்கு நீக்கம் உள்ளிட்ட புதிய நடவடிக்கைகளை எடுப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகாத லட்சத்தீவில் குண்டர் சட்டம் அமல்படுத்துவதும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இது குறித்து ஏற்கனவே தமிழ் நடிகர்கள் மற்றும் மலையாள நடிகர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் தற்போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்களும் இது குறித்து தனது கடுமையான விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

லட்சத்தீவுகள் இந்தியக் கடலின் ஆபரணம். மத்தியில் ஆட்சியில் உள்ள அறிவற்றவர்கள் அதை அழிக்க நினைக்கின்றனர். நாம் லட்சத்தீவு மக்களுடன் உடன் இருக்கிறோம்’ என்று அவர் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் இந்த ட்விட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com