இந்த ஆண்டு பூரி ஜெகந்நாதர் கோயில் ரதயாத்திரை நடைபெறுமா? முக்கிய அறிவிப்பு!

இந்த ஆண்டு பூரி ஜெகந்நாதர் கோயில் ரதயாத்திரை நடைபெறுமா? முக்கிய அறிவிப்பு!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரியில் ஜெகன்னாதர் ரத யாத்திரை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும் நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஜெகந்நாதர் ரத யாத்திரை பக்தர்கள் இல்லாமல் நடந்தது. இதனை அடுத்து இந்த ஆண்டு பக்தர்களுடன் பூரி ஜெகநாதர் ரதயாத்திரை நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் இருந்தது.

இந்த நிலையில் இதுகுறித்து ஒடிஸா அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒடிசாவின் பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை இந்த ஆண்டும் நடைபெறும் என்றும் ஆனால் அதே நேரத்தில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒடிசா மாநில சிறப்பு நிவாரண ஆணையர் கூறியபோது ’ஒடிசா மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் என்றும் ஆனால் அதே நேரத்தில் பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரையை பொது மக்கள் தொலைக்காட்சியில் நேரலையாக பார்த்து மகிழலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜெகந்நாதர் ரத யாத்திரை ஜூலை மாதம் 12ஆம் தேதி நடைபெறும் என்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பக்தர்கள் இல்லாமல் அதே நேரத்தில் பாதுகாப்புடன் நடைபெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாது பக்தர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு இருந்தாலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவே இந்த முடிவை அம்மாநில அரசு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com