"6 மாசப் போராட்டத்துக்கு அப்புறமும் வேளாண் சட்டங்களை தேவையா?"- ப.சிதம்பரம்

"6 மாசப் போராட்டத்துக்கு அப்புறமும் வேளாண் சட்டங்களை தேவையா?"- ப.சிதம்பரம்

சென்ற ஆண்டு கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் 3 புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது மத்திய அரசு தரப்பு. இந்தச் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் நலன்கள் கார்ப்பரேட்டுகளிடம் அடகு வைக்கப்படும் என்றும், விளை பொருட்களுக்கு அடிப்படை ஆதார விலை கிடைக்காது என்று குற்றம் சாட்டி நாட்டில் பல விவசாய சங்கங்கள் போராட்டத்தில் குதித்தன. இந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தப் போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டின.

பல்வேறு இடற்பாடுகளுக்கு மத்தியில் விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். தற்போது விவசாயிகள் போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் கடந்து விட்டன.

தொடர் போராட்டங்களை அடுத்து, வேளாண் சட்டங்களை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக மத்திய அரசு கூறியது. இந்தச் சட்டங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று விவசாயிகள் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த விவகாரம் பற்றி முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், 'விவசாயச் சட்டங்களை எதிர்த்து நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் இன்று 6 மாதங்கள் நிறைவு

விவசாயிகள் தங்கள் போராட்டத்தை விலக்கிப் கொள்ள வேண்டும் என்று சொல்லும் மத்திய அரசு, தான் நிறைவேற்றிய பொல்லாத சட்டங்களை விலக்கிக் கொள்கிறோம் என்று ஏன் சொல்ல மறுக்கிறது?

அரசு வினை விதைத்தது. வினை தானே விளையும்? மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக அரசு விலக்கிக் கொள்வதுதான் இந்தப் பிரச்னையின் தீர்வுக்கு முதல் படி' எனக் கூறியுள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com