கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு: மத்திய அரசின் 'சர்ச்சை' நிலைப்பாடு- வறுத்தெடுக்கும் ப.சிதம்பரம்

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு: மத்திய அரசின் 'சர்ச்சை' நிலைப்பாடு- வறுத்தெடுக்கும் ப.சிதம்பரம்

கொரோனா தொற்றால் தள்ளாடி வரும் இந்தியாவில், அதற்கான தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், மத்திய அரசு தரப்பில் சரியான திட்டமிடாதல் காரணமாக போதிய தடுப்பூசி இருப்பில் இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசின் போக்கு குறித்து கடுமையாக சாடியுள்ளார்.

அவர் தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், 'கொரோனா வைரஸ் தடுப்பூசி விவகாரத்தைப் பொறுத்த வரையில் உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு இந்தியாவில் தடுப்பூசிகளைத் தயாரிக்கும் இரண்டு நிறுவனங்களின் நலன்களை பாதுகாக்கும் வகையிலேயே நிலைப்பாடு எடுத்துள்ளது.

இதனால் நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள், தடுப்பூசியை போட்டுக் கொள்ள வகு நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒரே மாதிரியான விலை நிர்ணயம் செய்யாத மத்திய அரசு, தான் ஏழைகளுக்கு எதிரானது என்றும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானது என்றும் உறுதி செய்துள்ளது' என்று அடுக்கடுக்கான குற்றச்சாடுகளை சுமத்தியுள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com