இதுவரை 20 கோடி கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன: மத்திய அரசு

மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகளுக்குக் கால தாமதம் ஆவதால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்கள் சர்வதேச அளவில் டெண்டரும் விடப்பட்டுள்ளன.
இதுவரை 20 கோடி கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன: மத்திய அரசு

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, இதுவரை 20 கோடி கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலவசமாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளில் 1.84 கோடி இன்னும் செலுத்தவேண்டியுள்ளது.

அடுத்த மூண்டு நாட்களில் 51 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கூடுதலாக வழங்கப்பட உள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகளுக்குக் கால தாமதம் ஆவதால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்கள் சர்வதேச அளவில் டெண்டரும் விடப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல் 1.5 எண்ணிக்கையிலான கோவிஷீல்டு, கோவாக்ஸின் தடுப்பூசிகளையும் தமிழக அரசு ஆர்டர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com