கவிப்பேரரசு வைரமுத்துவுக்குக் கேரள அரசு விருது!

மலையாளக் கவிஞரும் பாடலாசிரியரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி குருப்புவின் பெயரால் கேரளப் பல்கலைக்கழகத்தின் தேர்வுக்குழு விருது பெறுபவரை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி வருகிறது.
கவிப்பேரரசு வைரமுத்துவுக்குக் கேரள அரசு விருது!

கவிப்பேரரசு வைரமுத்துவுக்குக் கேரளாவின் மிகப் புகழ்பெற்ற விருதான ஓ.என்.வி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளக் கவிஞரும் பாடலாசிரியரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி குருப்புவின் பெயரால் கேரளப் பல்கலைக்கழகத்தின் தேர்வுக்குழு விருது பெறுபவரை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி வருகிறது.

இப்படிப்பட்ட தேசிய அளவிலான உயரிய விருதை மலையாள மொழியில்லாத ஒருவர் பெறுவது இதுவே முதல் முறை. இந்த விருதைப் பெற்ற வைரமுத்து அனைத்து தமிழுக்கும் சிறப்பு சேர்த்திருக்கிறார். தமிழுக்குப் பெருமை சேர்த்திடும் கவிப்பேரரசின் இலக்கிய பயணம் சிறந்திட வாழ்த்துகள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com