ஒரே ஒரு பயணியுடன் மும்பையில் இருந்து துபாய் சென்ற விமானம்!

ஒரே ஒரு பயணியுடன் மும்பையில் இருந்து துபாய் சென்ற விமானம்!

ஒரே ஒரு பயணிக்காக மும்பையில் இருந்து 360 பயணிகள் செல்லும் விமானம் ஒன்று இயக்கப்பட்ட ஆச்சரியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மும்பையில் இருந்து துபாய்க்கு தினசரி பயணிகள் விமானம் இயக்கப்படுவது உண்டு, அந்த வகையில் மே 19ஆம் தேதி புறப்பட்ட போயிங் 777 ரக விமானத்தில் மும்பையில் இருந்து ஒரே ஒரு பயணி மட்டுமே துபாய்க்கு பயணம் செய்தார். அவர் தனது விமான பயணத்திற்காக செலுத்திய கட்டணம் வெறும் 18 ஆயிரம் ரூபாய் மட்டுமே. 360 இருக்கைகள் கொண்ட அந்த விமானத்தில் ஊரடங்கு காரணமாக வேறு யாருமே பயணம் செய்யவில்லை. இருப்பினும் ஒரே ஒரு பயணிக்காக விமான நிர்வாகம் அந்த விமானத்தை இயக்கியது. இந்த விமானம் மும்பையில் இருந்து துபாய் செல்வதற்காக 8 லட்சம் மதிப்புள்ள எரிபொருளை செலவு செய்தது என்பதும் ஆனால் ஒரே ஒரு பயணி மூலம் அந்த விமானத்திற்கு கிடைத்த வருமானம் வெறும் 18 ஆயிரம் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஒரு பயணியும் இல்லை என்றாலும் கூட இந்த விமானத்தை நாங்கள் இயக்கி இருப்போம் என்றும் ஏனென்றால் துபாயில் இருந்து மும்பை வருவதற்காக பயணிகள் அதிகமாக காத்து இருந்தார்கள் என்றும் அந்த விமான சேவை நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com