ஓட்டுனர் உரிமத்திற்காக இனி ஆர்.டி.ஓ செல்ல வேண்டிய அவசியமில்லை: அதிரடி அறிவிப்பு!

ஓட்டுனர் உரிமத்திற்காக இனி ஆர்.டி.ஓ செல்ல வேண்டிய அவசியமில்லை: அதிரடி அறிவிப்பு!

ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்த பிறகு அவர்கள் டிரைவிங் லைசென்ஸ் எடுக்க முறைப்படி வாகனங்களை ஓட்டுவதற்கு, டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதற்கு ஆர்டிஓ அலுவலகங்களில் பல்வேறு ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்கின்ற போது கட்டாயமாக ஆர்டிஓ அலுவலகங்களில் அவர்கள் அங்கு வாகன சோதனையில் அதாவது டிரைவிங் டெஸ்டில் தேர்ச்சி பெற வேண்டும். அந்த டெஸ்ட்டில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்களுக்கு லைசென்ஸ் வழங்கப்படும் என்ற நடைமுறை தற்போது வரை இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது அதனை மாற்றி அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் முறையாக பயிற்சி முடித்து, சான்றிதழ் பெற்றவர்களுக்கு அந்த சான்றிதழே போதுமானது என்றும், அவர்கள் தனியாக டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பிக்க்கவோ, அல்லது தனியாக டிரைவிங் டெஸ்ட் சோதனையில் பங்கேற்ற வேண்டிய அவசியமோ இல்லை என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

இதற்காக ஏற்கனவே மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்து, அது தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஜூலை 1-ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜூலை 1 முதல் அங்கீகாரம் பெற்ற ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் பயிற்சியை முடித்து சான்றிதழ் வாங்கினாலே போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com