சுங்கச்சாவடிகளில் இந்த கோட்டை தாண்டினால் கட்டணம் இலவசம்.. நெடுஞ்சாலைத் துறை அதிரடி அறிவிப்பு!

மேலும் ஒரு வாகனம் சுங்கச்சாவடியைக் கடக்க 10 நொடிகளுக்கு மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது.
சுங்கச்சாவடிகளில் இந்த கோட்டை தாண்டினால் கட்டணம் இலவசம்.. நெடுஞ்சாலைத் துறை அதிரடி அறிவிப்பு!

சுங்கச்சாவடிகளில் 100 மீட்டர் தொலைவில் மஞ்சள் கோடு வரைய வேண்டும். அந்த கோட்டை தாண்டி வாகனங்கள் வரிசை கட்டி நின்றால் இலவசமாகச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஒரு வாகனம் சுங்கச்சாவடியைக் கடக்க 10 நொடிகளுக்கு மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது.

சுங்கச்சாவடிகளைக் கடக்கும் அனைத்து வானங்களுக்கும் FASTag கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வானங்கள் நீண்ட வரிசையில் நிற்பது குறைந்துள்ளது. அப்படி இருந்தும் சில காரணங்களுக்காக 100 மீட்டர் தொலைவுக்கு மேல் வாகனங்கள் வரிசையில் நின்றால் சுங்கச்சாவடிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தேசிய நெடுஞ்சாலைத் துறை கூறியுள்ளது.

அதற்காக அனைத்து சுங்கச்சாவடிகளிலும் விரைவில் 100 மீட்டர் தொலைவில், விரைவில் மஞ்சள் கோடு வரையப்படும். FASTag உள்ள சுங்கச்சாவடிகளில் தானியங்கியாகக் கட்டணம் வசூலிக்கப்படும். 96 சதவீத சுங்கச்சாவடிகளில் FASTag பயன்பாட்டில் உள்ளது.

புதிய மஞ்சள் கோடு விதிமுறையால் தானியங்கி கட்டணம் வசூலிப்பில் தொழில்நுட்ப மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளது. அது சரி செய்யப்பட்டு எப்போது இந்த விதிகள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரியவில்லை.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com