பிரதமர் மோடி அறிவித்த தடுப்பூசி திட்டத்தால் இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவா?- திடுக் தகவல்

பிரதமர் மோடி அறிவித்த தடுப்பூசி திட்டத்தால் இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவா?- திடுக் தகவல்

பிரதமர் நரேந்திர மோடி, நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, நாட்டில் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் ஒன்றிய அரசு சார்பில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று கூறினார். முன்னதாக தடுப்பூசி போடுவதை மாநில அரசுகளின் பொறுப்பில் விட்டிருந்தது ஒன்றிய அரசு. அது கடும் விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் தற்போது ஒன்றிய அரசே அதை ஏற்க உள்ளதாக கூறியுள்ளார் மோடி.

இந்நிலையில், நாட்டில் தகுதி படைத்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதால் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்து உள்ளன.

முதல் கட்டத்தில் வாங்கப்பட உள்ள கொரோனா தடுப்பூசி மருந்துக்கு போதிய நிதி ஆதாரம் உள்ளதாகவும், இரண்டாம் கட்டத்துக்கு நிதி இருக்காது என்றும், அதற்கு விரைவில் நிதி ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

நாட்டில் தற்போது கோவாக்ஸின், கோவிஷீல்டு மற்றும் ஸ்பட்னிக் வி ஆகிய மூன்று கொரோனா தடுப்பூசிகள் தான் பயன்பாட்டில் உள்ளன.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com