வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு!

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு!

வங்கக்கடலில் ஜூன் 11ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும் என்றும் ஏற்கனவே இந்தியவானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில் தற்போது சற்றுமுன் இதுகுறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

வங்கக்கடலில் சற்றுமுன்னர் காற்றழுத்த தாழ்வு உருவாகி இருப்பதாகவும் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஒடிசா அருகே கடந்து செல்லும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறத். குறிப்பாக ஒடிசா ஆந்திரா மற்றும் மேற்கு வங்க கடலோர பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர்தான் மேற்கு வங்க மாநிலத்தில் புயல் வீசியதால் கடுமையான பாதிப்பை அம்மாநிலம் எதிர் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு தோன்றியதால் அது புயலாக மாறுமா? என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com