இந்தியாவில் ரூ.13,000 கோடி மோசடியில் ஈடுபட்டவர், ஆண்டிகுவாவில் காணவில்லை.. அதிர்ச்சி தகவல்!

ஆண்டிகுவா காவல் துறையினர் மேஹூல் சோக்க்ஷியை தேடி வருகின்றனர் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ரூ.13,000 கோடி மோசடியில் ஈடுபட்டவர், ஆண்டிகுவாவில் காணவில்லை.. அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள, 13,000 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபடத் துணையாக இருந்த நீரவ் மோடியின் மாமா மேஹூல் சோக்க்ஷி ஆண்டிகுவாவில் காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்டிகுவா காவல் துறையினர் மேஹூல் சோக்க்ஷியை தேடி வருகின்றனர் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இந்திய வங்கியில் தங்களது வைர நகை வணிகத்துகாக 13,000 கோடி ரூபாய் வரை கடனை பேற்று மோசடி செய்தவர் நீரவ் மோடி. அவருக்குத் துணையாக இருந்தவர் அவரின் மாமா மேஹூல் சோக்க்ஷி.

பல ஆயிரம் கோடி ரூபாய்க் கடன் வாங்கிய இவருக்கு 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆண்டிகுவா குடியுரிமைக்கான அனுமதியை இந்திய அரசு வழங்கியது. 2018 ஜனவரி மாதம் இவர் ஆண்டிகுவா சென்றுவிட்டார். பிப்ரவரி மாதம் பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்தது. அதன் பிறகு மேஹூல் சோக்க்‌ஷி ஆண்டிகுவாவில் சென்று தப்பித்துக்கொண்டார். நீரவ் மோடி லண்டனில் தலைமறைவு வாழ்க்கை இருந்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

நீரவ் மோடி, மேஹூல் சோக்‌ஷியை நாடு கடத்தும் முயற்சியில் இந்திய அரசு உள்ளது. இந்நிலையில் மேஹூல் சோக்‌ஷி காணவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com