மாஸ்க் அணிந்தால் பேச முடியவில்லையா? மைக், ஸ்பீக்கருடன் ஒரு மாஸ்க்!

மாஸ்க் அணிந்தால் பேச முடியவில்லையா? மைக், ஸ்பீக்கருடன் ஒரு மாஸ்க்!

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள முக கவசம் அணிவது கட்டாயம் என்று உலக சுகாதார மையம் முதல் உள்ளூர் சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கவை.

பூமியில் நிரந்தரமாக கொரோனா வைரஸ் தங்கும் நிலை ஏற்படலாம் என்றும் அதனால் பொதுமக்கள் நிரந்தரமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்ற நிலை வரும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் முகக் கவசம் அணிவது ஒரு சிலருக்கு மட்டுமல்ல பலருக்கும் இருக்கும் தொல்லை எதிராளியிடம் பேச முடியாத நிலை உள்ளது என்பதுதான். முகக்கவசம் அணிந்து கொண்டே பேசுவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதையும் அப்படியே பேசினாலும் அவர்கள் பேசுவது எதிரில் இருப்பவருக்கு சரியாக புரியவில்லை என்பதை கவனித்த கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இதற்கென ஒரு புதிய மாஸ்க்கை கண்டுபிடித்துள்ளார்.

அந்த இளைஞர் கண்டுபிடித்த மாஸ்க்கில் மைக் மற்றும் ஸ்பீக்கர் உள்ளது. இந்த முக கவசத்தை அணிந்து கொண்டால் பேசுவதில் எந்த சிரமும் இருக்காது என்பதும் நாம் பேசுவது எதிரில் உள்ளவர்களுக்கு தெளிவாக கேட்கும் என்பது குறிப்பிடதக்கது. மருத்துவர்கள் பல அடுக்கு கொண்ட முகக் கவசங்கள் அணிய வலியுருத்துவதால் எதிரில் உள்ளவர்களிடம் பேச ஏற்படும் சிரமத்தை உணர்ந்து தான் இந்த கருவியை உருவாக்கியதாக அந்த இளைஞர் விளக்கமளித்துள்ளார். இந்த மைக் மற்றும் ஸ்பீக்கருடன் கொண்ட மாஸ்க் விரைவில் பொதுமக்கள் மத்தியில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com